Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கார்த்தி படத்தில் முதல் முறையாக இணையும் இசை பிரபலம்

Karthi Harris Jayaraj first time collabaration

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்பொழுது இயக்குனர்கள் பாண்டிராஜ், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜை கடந்த நாட்களில் நடந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் சூர்யாவிற்கு சொந்தமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்து வரும் இப்படத்தில் சாயீஷா, பிரியா பவானி ஷங்கர் என இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் முக்கிய வேடத்தில்  சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா போன்றவர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் படத்திற்கு 'கடைக்குட்டி சிங்கம்' என்ற டைட்டில் வைத்து படத்தின் டைட்டில் போஸ்டரை கடந்த நாட்களில் வெளியிட்டனர். 

இந்த படத்தினை தொடர்ந்து ரஜத் ரவிசங்கர் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் கார்த்திக் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் இணைந்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இவர்களின் ஜோடிக்கு வெகுவான வரவேற்பு கிடைத்ததினை தொடந்து இரண்டாவது முறையாக இந்த ஜோடி இப்படத்தின் மூலம் இணையவுள்ளது.     

இந்நிலையில் இப்படத்தில் இசையமைக்கும் பணியில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் மூலம் கார்த்திக் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி முதல் முறையாக இணையவிருப்பது குறிப்பிட தக்கது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் இதர நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், படத்தின் டைட்டில் போன்ற படத்தின் தகவல் மிகவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கார்த்தி படத்தில் முதல் முறையாக இணையும் இசை பிரபலம்