Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உதயநிதி படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்

uthayanidhi stalin new movie

பிரியதர்சன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் நிமிர். இந்த படத்தில் நமீதா பரமோட், பார்வதி நயினார் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில்  ‘கண்ணே கலைமானே' என்ற புது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.  

உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உதயநிதி தயாரித்து நடிக்கும் இப்படத்தில் நாயகியாக தமன்னா களமிறங்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் இந்த ஜோடி முதல் முறையாக இணையவிருப்பது குறிப்பிட தக்கது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி துவங்க விருக்கும் இப்படத்தின் படப்பிடிற்கான  ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   

இந்நிலையில் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கலை கலைஞர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இசையமைக்கும் பணியில் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகி இருப்பதாகவும், பாடலாசிரியராக வைரமுத்து இணைத்திருப்பதாகவும், மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டிருப்பதாகவும் தகவலை வெளியிட்டுள்ளனர்.      

        

உதயநிதி படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்