Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஆக்சன் கிங் அர்ஜுன் தயாரித்து இயக்கும் 'சொல்லிவிடவா' இசை வெளியீடு

sollividava movie audio launch

விஷால் நடிப்பில் வெளிவந்த 'பட்டத்து யானை' படத்தின் மூலம் ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக திரையுலகில் அறிமுகமானார். அதனை அடுத்து அவர் அர்ஜுன் தயாரித்து இயக்கிவரும் 'சொல்லிவிடவா' என்ற படத்தில் நாயகியாக களமிறங்கியுள்ளார். ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக கன்னட திரைப்பட நாயகன் சந்திரன் குமார் இணைந்துள்ளார். மேலும் இவர்களுடன்  இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாஷினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உட்பட திரையுலக வட்டாரமே இணைந்து நடித்துள்ளது.     

அர்ஜுனுக்கு சொந்தமான  ‘ஸ்ரீ ராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அர்ஜுன் தயாரித்த இப்படத்தில் ஜெஸ்ஸி கிஃப்ட் இசையமைத்துள்ளார். மேலும் ஹெச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபடுகிறார். இப்படத்தினை கன்னடத்தில் 'பிரேமா தர்ஹா' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. இதனை தொடர்நது பெங்களூரில் நேற்று (17.12.17) நடைபெற்ற கன்னட வெர்ஷனின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களிடம் மதிக்கத்தக்க வெகுவாக வரவேற்கப்பட்டது . இதற்கு அடுத்ததாக தமிழில் வருகிற 20ம் தேதி இசை வெளியீடு இருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.     

ஆக்சன் கிங் அர்ஜுன் தயாரித்து இயக்கும் 'சொல்லிவிடவா' இசை வெளியீடு