Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர்

viswasam movie music director

இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் கூட்டணி நான்காவது முறையாக 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' படத்திற்கு பிறகு இணைந்துள்ளது. இந்த படத்திற்கு 'விஸ்வாசம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதனை நிரூபிக்கும் விதமாக முன்னதாக இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த படத்தை 'விவேகம்' படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு பணிகளையும், ரூபன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது யுவன் சங்கர் ராஜா மறுத்ததனால் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சாம் சி எஸ் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 'விஸ்வாசம்' படத்திற்கு இசையமைப்பாளராக 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர்