Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விசுவாசம் படத்தின் சிறப்பு பூஜை

viswasam movie poojai

அஜித்தின் 58வது படத்தின் மூலம் நான்காவது முறையாக சிறுத்தை சிவா - அஜித் கூட்டணி  இணைந்துள்ளது. இந்த படத்தில் அஜித் கருத்த முடி, ஸ்லிம்மான தோற்றம் என்று புது வித கெட்டப்பில் களமிறங்க உள்ளார். இதன் காரணத்தினால் புது நாயகியை அஜித்துடன் இணைந்து நடிக்க வைப்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 

மேலும் 'விவேகம்' படத்தினை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் அஜித்தின் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளது. அஜித் படங்கள் என்றாலே படத்தினை பற்றிய எந்த வித தகவல்கள்களும்  சிறிதும் வெளிவராது. இது அஜித் படத்திற்கான ஸ்பெஷலாக இருந்தது. இந்நிலையில் தல 58 படத்திற்கான டைட்டிலை 'விசுவாசம்' என்று சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். இந்த தகவல் தல  ரசிகர்கர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக இருந்தது.    

 ஜனவரி மாதத்தில் துவங்கிவிருக்கும் இப்படத்திற்கு சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பு பணியிலும் இணைந்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாகவே படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  

விசுவாசம் படத்தின் சிறப்பு பூஜை