Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தனுஷின் மாரி 2 டைட்டில் ஸ்டில்

maari 2 movie official logo

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' போன்ற படங்களில் பிசியாக உள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரேமம் புகழ் சாய் பல்லவி இணைகிறார். இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இணைந்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளார். இவர்களுடன் கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், தனுசுக்கு வில்லியாக களமிறங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் டைட்டில் லோகோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

தனுஷின் மாரி 2 டைட்டில் ஸ்டில்