Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பத்து வருடத்திற்கு பிறகு தனுஷ் கூட்டணியில் பிரபல இசையமைப்பாளர்

yuvan shankar raja joined maari 2 movie

கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் இதனை தொடர்ந்து 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கிவரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மற்ற நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், கலை கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வரும் இந்நிலையில் இசையமைக்கும் பணியில் யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வந்துள்ளது.    

தனுஷ் தமிழ் திரையுலகில் அறிமுகமான  ‘துள்ளுவதோ இளமை’ படம் முதல், அதனை அடுத்து எடுக்கப்பட்ட காதல் கொண்டேன், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், புதுப்பேட்டை, பரட்டை என்கிற அழகுசுந்தரம், யாரடி நீ மோகினி போன்ற படங்கள் வரை யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பது குறிப்பிட்ட தக்கது. மேலும் பத்து வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.    

கடந்த சில வருங்களாக அனிருத், ஷான் ரோல்டன் போன்ற இளம் இசையமைப்பாளர்களுடன் இணைத்திருந்த தனுஷ் தற்பொழுது அவரின் அறிமுக படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உடன் இணையவுள்ளார். 

பத்து வருடத்திற்கு பிறகு தனுஷ் கூட்டணியில் பிரபல இசையமைப்பாளர்