Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

குப்பத்து ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த ஜிவி பிரகாஷ்

குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'நாச்சியார்'. இந்த படத்தில் அவருடைய நடிப்பில், இனிமையான காதலும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் 10 படங்களில் நடித்து வருகிறார். இதில் 4ஜி, ஐங்கரன், செம, அடங்காதே, போன்ற படங்கள் தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் குப்பத்து ராஜா, 100% காதல், சர்வ தாள மையம், ரெட்டை கொம்பு, கறுப்பர் நகரம் போன்ற படங்களின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'குப்பத்து ராஜா' படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நடன இயக்குனரான பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பலக் லால்வானி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் தெலுங்கு நடிகையான பலக் லால்வானிக்கு தமிழில் அறிமுகமாகும் முதல் படமாகும்.

இவர்களுடன் நடிகர் பார்த்திபன், எம்எஸ் பாஸ்கர், யோகிபாபு, ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ் போகஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரவணன், சிராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் மே மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இந்த படம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக உருவாகி வந்தது. இடையில் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தான் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளை படக்குழு துவங்கவுள்ளது.

குப்பத்து ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த ஜிவி பிரகாஷ்