Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அருவி படத்தினை பெருமை படுத்திய நடிகர் ஜெயம் ரவி

jeyam ravi new profile picture

அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் டிசம்பர் 15ம் தேதி வெளிவந்த படம் அருவி. இந்த படத்தின் நாயகியாக அதிதி  பாலன் நடித்திருந்தார். பிந்து மாலினி – வேதாந்த் பரத்வாஜ் இணைந்து இசையமைத்திருந்த இப்படத்தில் சமூக பிரச்சனையை மையமாக கொண்டு படத்தினை முன்னோக்கி நகர்த்துவதோடு அந்த பிரச்சனையை ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில்  வெளிப்படுத்தியிருந்தனர். 

இப்படம் வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள், விமர்சனங்கள், பிரபல இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் மற்றும் பல தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், அரவிந் சாமி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் சங்கர், 'விக்ரம் வேதா' இயக்குனர் புஷ்கர்-காயத்ரி என பலரும் பாராட்டியிருந்தனர். 

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி இப்படத்தினை பெருமைப்படுத்தும் விதமாக இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அவரது ட்விட்டரின் சுயவிவர (profile picture) பக்கத்தில் வைத்துள்ளார். 

நடிகர் கார்த்திக் ''இப்படத்தினை பார்ப்பதற்கு வியப்பாக இருப்பதாகவும், நான் ஒரு பெண் குழந்தையின் அப்பாவாக இருப்பதால் என்னவோ தெரியவில்லை, இந்த படம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இயக்குனரின் கேள்விகள் சமூகத்தை சார்ந்ததாக இருப்பதை மட்டும் அல்லாமல் பொழுதுபோக்காகவும் படத்தினை நகர்த்தியுள்ளார். மேலும் அதிதியின் நடிப்பு அழகாகவும், படத்தின் காட்சி, இசை என அனைத்துமே புதிய அனுபவத்தை தந்தது” என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.      

அருவி படத்தினை பெருமை படுத்திய நடிகர் ஜெயம் ரவி