Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜீவாவின் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு

தற்போது ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்து வரும் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'கலகலப்பு 2'. இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக ஜீவா நடிப்பில் உருவாகி வரும் கீ, ஜிப்ஸி மற்றும் கொரில்லா போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. இதில் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'கொரில்லா' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. தாய்லாந்தில் மும்முரமாக நடைபெற்ற படப்பிடிப்பில் சிம்பன்சி குரங்கை வைத்து படப்பிடிப்பை நிகழ்த்தி வந்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பிறகு தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 22இல் காலை 9மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்து வரும் இந்த படம் இந்தியாவில் சிம்பன்சி குரங்கை வைத்து உருவாகும் முதல் படமாகும்.

இந்த படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ஜீவா நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனரான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜிப்ஸி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜீவா ஒரு நாடோடியாக மாடலான நடாஷா சிங்குடன் இணைந்து நடிக்க உள்ளார்.

ஜீவாவின் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு