Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மீண்டும் சங்கிலி புங்கிலி இயக்குனருடன் இணைந்த ஜீவா

actor jiiva new movie with directo Ike

கடந்த ஆண்டு மே மாதம் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் காலிஸ் இயக்கத்தில் 'கீ' மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' போன்ற இரண்டு படங்களும் அடுத்த மாதம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் ஜீவா மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாவது இதுவே முதன் முறையாகும். இந்நிலையில் நடிகர் ஜீவாவின் புது பட தகவல் வந்துள்ளது. இந்த படத்தை 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இயக்கிய இயக்குனர் ஐக் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனரான கமல் ஹாசனின் உதவியாளராக பணிபுரிந்தவர். இந்த படம் இயக்குனர் ஐக்கின் முதல் படமாகும். இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி, ராதிகா, தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகியோர் தயாரித்திருந்தனர். இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா மற்றும் ஐக் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

நடிகர் ஜீவா தற்போது இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' படத்திலும், 'சிங்கம் புலி' படத்தின் இயக்குனர் சாய் ரமணி இயக்கத்திலும் பிசியாக உள்ளார். இந்த படங்களை முடித்த பிறகு இயக்குனர் ஐக் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் சங்கிலி புங்கிலி இயக்குனருடன் இணைந்த ஜீவா