Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் ஜீவாவின் கொரில்லா படத்தில் முதல் முறையாக சிம்பான்சி குரங்கு

jiiva new movie title gorilla

நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது 'கலகலப்பு 2' படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் கதாநாயகி ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்போது மிகவும் பிரபலமாகி வரும் 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜனவரியில் தொடங்க உள்ளது.

 நடிகர் ஜீவாவின் 29 வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை அதிரடி த்ரில்லர் படமாக உருவாக்க உள்ளனர். நடிகர் ஜீவா மற்றும் ஷாலினி பாண்டே முதல் முறையாக இணையும் இந்த படத்திற்கு 'கொரில்லா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த படம் இந்தியாவின் முதல் சிம்பன்சி படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக சிம்பான்சி குரங்கை நடிக்க வைக்க உள்ளனர். இந்த குரங்கிற்கு காங் என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த சிம்பான்சி குரங்கிற்கு தாய்லாந்தில் உள்ள சாமுட் ட்ரைனிங் ஸ்டேஷனில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த பள்ளியில் ஹாங்கோவர் (Hangover), பிளானட் ஆஃ தி ஏப்ஸ் (planet of the apes) போன்ற படங்களில் நடித்த குரங்குகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜீவாவின் கொரில்லா படத்தில் முதல் முறையாக சிம்பான்சி குரங்கு