Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்

க்ரைம் 23 தெலுங்கு படத்தின் ட்ரைலரை பிரபாஸ் இன்று மாலை வெளியிட உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னனணி நடிகரான அருண்விஜய் 2012-இல் வெளியான 'தடையற தாக்க' படத்திற்கு பிறகு மீண்டும் மூன்று வருடங்களுக்கு பிறகு தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்த அருண் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. ஆதரவளித்த ரசிகர்களுக்கு அருண் விஜயும் கண்ணீர் மல்க தனது நன்றியினை தெரிவித்தார்.

வில்லன் தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சிறந்த வில்லனுக்கான எடிசன் மற்றும் சீமா விருதுகள் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. 'என்னை அறிந்தால்' படத்திற்க்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் 'குற்றம் 23'. இந்த படத்தை ஈரம், ஆறாது சினம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் வெங்கடாச்சலம் இயக்கியிருந்தார். மருத்துவ பின்னணிகளில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் கதை பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவலை தழுவியதாகும். இந்த படத்தில் அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். தற்போது இந்த படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் 'க்ரைம் 23' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் பிரபாஸ் இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிட உள்ளார். நடிகர் அருண் விஜய், தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சாஹு' படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

அருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்