ட்விட்டரில் நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
விக்னேஷ் (Author) Published Date : Dec 13, 2017 15:43 ISTபொழுதுபோக்கு
ரஜினிகாந்த் தனது 67வது பிறந்த நாளை (12.12.2017) நேற்று கொண்டாடினர். அவரின் பிறந்த நாளுக்கு திரைத்துறை பிரபலங்கள், கட்சி தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடகங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கும் விதமாக அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதில் "செய்தித்தாள்கள் மூலமாகவும், சுவரொட்டி விளம்பரங்கள் மூலமாகவும், சமூகவலை தளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அனைவருக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் "அரசியல் சார்ந்த நண்பர்கள், திரைத்துறை நண்பர்கள், விளையாட்டு வீர நண்பர்கள், பத்திரிக்கை நிபுண நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி" என்றும் பதிவு செய்துள்ளார்.