Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் சிபிராஜ் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ranga movie first look

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'சத்யா'. இந்த படம் தெலுங்கு திரையுலகில் வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போன ஒரு குழந்தையை கண்டுபிடிக்கும் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருந்த இப்படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்திருந்தார். மேலும் வரலட்சுமி சரத்குமார் காவல் துறை அதிகாரியாகவும்  ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா, உள்ளிட்டோர் முக்கிய வேடத்திலும் நடிதந்திருந்தனர். 

இப்படம் வெளிவந்தத்தில் இருந்து  ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியிலும் பிரபல திரைபட நட்சத்திரங்களாலும் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த மாபெரும் வெற்றி படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஒரு த்ரில்லர் படத்தில் சிபிராஜ் களமிறக்கவிருக்கிறார்.   

இயக்குனர் வினோத் இயக்கவிருக்கும் இந்த புது படத்தில் சிபிக்கு ஜோடியாக 'கிடாரி' நாயகி  நிகிலா விமல் நடிக்கவுள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த 'ரங்கா' படத்தின் தலைப்பினை சிபியின் புது பட தலைப்பாக வைக்கப்பட்டிருப்பதால் படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.மேலும் இப்படத்திற்கான பஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை 7மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன் படி தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.            

நடிகர் சிபிராஜ் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு