Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிம்பு

mohan raja next movie

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து கிறுஸ்துமஸ் விருந்தாக கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இந்த படம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'வேலைக்காரன்' வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படம் இசையை மையமாக வைத்து இருப்பதால் அதற்கு சிம்பு பொருத்தமானவர் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் 'அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்' இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால் சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனை அடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் மணிரத்னம் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனை அடுத்து சிம்பு மோகன் ராஜா இயக்கும் புது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிம்பு