Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மிர்ச்சி சிவாவின் 'தமிழ்ப்படம் 2.0' பூஜை

tamil padam2 movie poojai stills

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சனங்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் பாரம்பரியத்தை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது. இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் அமுதன் சமீபத்தில் தெரிவித்தார், அந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா இந்த பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கவுள்ளார். மேலும் முதல் பாகத்தில் சிவா ஜோடியாக நடித்த திஷா பாண்டே இந்த பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளிய `விக்ரம் வேதா' திரைபடத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்கிறார். 

மிர்ச்சி சிவாவின் 'தமிழ்ப்படம் 2.0' பூஜை