Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கலகலப்பு 2 வில் சிறப்பு தோற்றத்தில் நந்திதா

nandita joined in kalakalappu team

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'கலகலப்பு 2'. இந்த படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா, ராதா ரவி, யோகி பாபு, சிங்கம் புலி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் தற்போது நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார்.

 இந்த படத்தில் நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த படத்தில் நந்திதா இணைந்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் "கலகலப்பு 2-வில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் சுந்தர்.சிக்கு எனது நன்றி." என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் இடம்பெறும் காட்சிகளை காரைக்குடி, புனே, இந்தூர் மற்றும் ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்த வருடம் பிப்ரவரியில் வெளிவரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

கலகலப்பு 2 வில் சிறப்பு தோற்றத்தில் நந்திதா