இறுதி கட்டத்தை எட்டிய விக்ரமின் துருவ நட்சத்திரம்
வேலுசாமி (Author) Published Date : Feb 07, 2018 15:06 ISTபொழுதுபோக்கு
நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக 'ஸ்கெட்ச்' படம் கடந்த பொங்கலன்று வெளியானது. இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' மற்றும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் சீயான் விக்ரம் ஜோடியாக நடிகை ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் நடிகர் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் வில்லன் யார் என்பதை படக்குழு ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மலையாள நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு இரவு நேரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து இரு வாரங்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்த படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'சாமி 2' போன்ற படங்களை முடித்த பிறகு சீயான் `மஹாவீர் கர்ணா' படத்தில் இயக்குனரை ஆர்எஸ் விமலுடன் இணைய உள்ளார்.