Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விடுமுறை காலங்களில் மாணவ மாணவியர் என்ன செய்ய வேண்டும் என்ற நடிகர் விவேக் கருத்துக்கு எதிர்ப்பு

பள்ளி மாணவர்கள் பொது தேர்வு முடித்து விட்டு கோடை விடுமுறைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு நடிகர் விவேக் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது அனைத்து பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலங்களை பள்ளி மாணவ மாணவிகள் குடுமபங்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து விளையாட்டு கலந்த சந்தோசத்துடன் கழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் மாணவ மாணவிகள் விடுமுறை காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் "அன்பான மாணவர்கள் மற்றும் குழந்தைகளே..இந்த கோடையில் விடுமுறையை சந்தோசமாக அனுபவியுங்கள். விளையாடிய பின்னர் அதிகப்படியான தண்ணீரை குடியுங்கள்..மாணவிகளே!! தாய்க்கு சமயலறையில் உதவியாக இருந்து சமையலை கற்று கொள்ளுங்கள்..மாணவர்களே!! தந்தையிடம் சென்று அவர் எப்படி குடுமபத்திற்காக உழைக்கிறார் என்று பாருங்கள்!!உறவை வலுவாக்குங்கள்." என்று அவர் மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆனால் இவரின் அறிவுரையை தவறாக புரிந்து கொண்ட நபர் ஒருவர் "பெண் பிள்ளைகளை சமையலறைக்கு தான் போக சொல்லனுமா? சினிமாவில் மட்டும் பகுத்தறிவு, பெண் உரிமை போதிச்சா பத்தாது Mr.விவேக். வாழ்ந்து காட்டனும். பழைய பஞ்சாங்கமா இருக்காதீங்க." என்று அவர் பதிலளித்துள்ளார். இதற்கு நடிகர் விவேக்கின் அருமையை புரிந்து கொண்ட ரசிகர் ஒருவர் "அவரு யாருனு பாருங்க முதலில். அப்புரம் சொல்ல வரத புரிஞ்சுக்கோங்க. விவேக் என்பவர் பற்றி தமிழகம் புரிந்து கொண்டது இவ்வளவு தானா. மன்னிக்கவும் திரு. விவேக்." என்ற பதிலளித்துள்ளார்.

இவரின் அன்புக்கு தலைவணங்கி நடிகர் விவேக் "அன்பு நண்பரே! தாயிடம் இருந்து சமையலையும் தந்தையிடம் இருந்து கடின உழைப்பையும் இந்த விடுமுறைக் காலத்திலாவது தெரிந்து கொள்க என்ற என் பதிவை அனைத்துப் பெற்றோரும் ஆமோதிப்பர். என்னை புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றி." என்ற தனது ரசிகருக்கு நன்றியை தெரிவித்துள்ளார். பெண்கள் சமயலறைக்கு தான் போக வேண்டுமா என்ற கேள்வி நியாயமாக இருந்தாலும், தற்போதுள்ள சூழலில் பெண்களின் நிலைமையை பற்றி ஒரு குடும்பஸ்தரிடம் கேட்டால் தெரிந்து விடும். சமையல் தெரியாத பெண்களிடமும், அதிகாரம் செய்யும் பெண்களிடமும், சீரியல் பார்த்து கண்ணீர் விடும் பெண்மணிகளிடமும் மாட்டி கொண்டு அவர்கள் படும் பாடு அவர்களுக்கு தான் தெரியும்.

முந்தைய காலங்களில் வாழ்ந்த பெண்மணிகளுக்கு நாற்குணங்களான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவற்றுடன் வீரத்தையும் சேர்த்து தான் கற்று கொடுத்தனர். ஆனால் நமது முன்னோர் பெண்மணிகளின் திறமையும் வீரமும் தற்போதைய கலாச்சார பெண்மணிகளிடத்தில் இருப்பதில்லை. அதன் விளைவாக தான் தற்போது பாலியல் வன்கொடுமை போன்ற சமபவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. பெண்கள் வாளை ஏந்தி போர் புரிந்த வீரம் பொறிந்த மண்ணில் பெண்களுக்கு நேரும் இத்தகைய கொடுமைகள் ஆண்களுக்கும் இழிவு, பெண்களுக்கும் இழிவு தான்.

விடுமுறை காலங்களில் மாணவ மாணவியர் என்ன செய்ய வேண்டும் என்ற நடிகர் விவேக் கருத்துக்கு எதிர்ப்பு