Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி

இயக்குனர் பாலா இயக்கி வரும் வர்மா படத்தில் நாயகியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி இணைந்துள்ளார். Photo Credit - @rameshlaus (Twitter)

இயக்குனர் பாலா இயக்கத்தில் இறுதியாக நடிகை ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் 'நாச்சியார்' படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படம் வெளியாகி 25வது நாளாக தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாலா 'வர்மா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் துருவ் விக்ரம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படம் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு சமீபத்தில் நடைபெற்று வந்தது. முதலில் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

பின்னர் தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நாயகியாக நடித்த ஷாலினி பாண்டே நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக, நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி