Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இயக்குனர் பாலாவின் தெலுங்கு ரீமேக் ஷுட்டிங்

varma movie updates

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ், ஜோதிகா, ரோக்லின் வெங்கடேஷ் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள படம் நாச்சியார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றதோடு ஜோவின் ஒரு வார்த்தையால் தவறுதலான விமர்சனங்களும் வெளிவந்தது.  

இதற்கு அடுத்த படியாக இயக்குனர் பாலா தெலுங்கு ரீமேக் படத்தில் ஈடுபட உள்ளார். தெலுங்கு திரையுலகில் இந்த ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் பல வெற்றியை புரிந்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் பணியில் இயக்குனர் பாலா ஈடுபடவிருப்பதாக தகவல்கள் முன்பே வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்திற்காக படபிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதியில் இருந்து துவங்கவிருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளனர். 

நடிகர் 'சீயான்' விக்ரம் மகன் துருவ் விக்ரம் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். மேலும் இந்த படத்திற்கு 'வர்மா' என்று தலைப்பினை வைத்து டைட்டில் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். இந்த டைட்டில் போஸ்டரை பார்க்கும் போது ரசிகர்கள் கவரும் வகையிலும் புது வித தோற்றத்திலும் இருந்ததால் வெளிவந்த சில மணி நேரத்திலையே வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

இயக்குனர் பாலாவின் தெலுங்கு ரீமேக் ஷுட்டிங்