Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜி.வி.பிரகாஷ் பாடலுக்கு இளையராஜா இசையமைப்பு

gv prakash sing on ilayaraja music

இயக்குனர் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'நாச்சியார்'. இந்த படத்தை பாலா, பி ஸ்டுடியோஸ் மற்றும் இஆன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகை ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த டீசரில் ஜோதிகா வெளிப்படுத்தியிருக்கும் வார்த்தையால் அவருக்கு சர்ச்சை நேர்ந்துள்ளது. இதனால் ஜோதிகாவின் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் இளையராஜா இசையமைப்பில் ஒரு பாடலை பாடியுள்ளதாக தனது முகநூல் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 'உன்னை விட்டா யாருமில்ல' என்று தொடங்கும் பாடலை 'சூப்பர் சிங்கர்' ப்ரியங்காவுடன் சேர்ந்து பாடியுள்ளதாகவும், அந்த பாடலில் இடம் பெரும் 'உங்கையும் எங்கையும் சேர்த்து கைரேகை மாத்துது காத்து' வரிகளையும் பதிவிட்டுள்ளார். இந்த நாள் எனக்கு முக்கியமான நாள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் பாடலுக்கு இளையராஜா இசையமைப்பு