Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

புது வித கெட்டப்பில் ஜோதிகா- டீசரை வெளியிடும் சூர்யா

புது வித கெட்டப்பில் ஜோதிகா- டீசரை வெளியிடும் சூர்யா

சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆன ஜோதிகா, எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுத்தத்தினை தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த காரணத்தினால் முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.     

இந்நிலையில் பாலா தயாரித்து இயக்கும் 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா புது வித கெட்டப்பில் நாயகியாக களமிறங்கி நடித்துள்ளார். நாயகனாக நடிக்கும் ஜிவி பிரகாஷ் இது வரை பார்த்திராத படு லோக்கல் கெட்டப்பில் நடித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.அதிரடி ஆக்சன் கலந்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தில் இளையராஜா இசையமைக்க, ஈஸ்வர் ஒளிப்பதிவு, சதிஷ் சூர்யா எடிட்டிங் பணியினை செய்துள்ளனர். 

படத்தின் பஸ்ட் லுக் மும்பே வெளிவந்த நிலையில் தற்பொழுது டீசரை சூர்யா இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார். இதன் காரணத்தினால் சூர்யா, ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் ஆரவாரத்தோடு காத்திருக்கின்றனர்.            

புது வித கெட்டப்பில் ஜோதிகா- டீசரை வெளியிடும் சூர்யா