Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பொங்கலுக்கு விருந்தளிக்கும் விக்ரம்

Sketch movie still

'துருவ நட்சத்திரம்' அதிரடி படத்தினை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச். இந்த படத்தினை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்திற்காக நடிகர் விக்ரம் பல வித குரலில் டப் செய்து அசத்தியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் இந்த ஜோடி முதல் முறையாக இணைந்திருப்பது குறிப்பிட தக்கது. 

வி கிரேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.எஸ்.தாமன் இசையமைக்க, எம்.சுகுமார் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் மீது எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் படக்குழு வெளியிட்ட அதிகார பூர்வமாக அறிவிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடுவதாக தகவலை வெளியிட்டுள்ளது.             

இந்த படத்தினை தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், பிரபு தேவாவின் குலேபகாவலி, சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடித்த கலகலப்பு 2 போன்ற படங்கள் பொங்கலுக்கு களமிறங்கவுள்ளது.     

பொங்கலுக்கு விருந்தளிக்கும் விக்ரம்