நடிகர் ஜிவி பிரகாஷின் 3D படத்தில் இணைந்த நடிகை சஞ்சிதா செட்டி
வேலுசாமி (Author) Published Date : May 04, 2018 10:53 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தற்போது நாச்சியார் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு செம்ம, 4G, ஐங்கரன், குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், கருப்பர் நகரம் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் இசையமைப்பாளராக 2006இல் வெயில் படத்தின் மூலமாகவும், நாயகனாக 2015இல் 'டார்லிங்' படத்தின் மூலமும் அறிமுகமானார். இந்த படத்திற்கு இவருடைய நடிப்பில் வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு இவருடைய இயக்கத்தில் வெளியான 'அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்' படத்தின் தோல்வியால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. ஆனால் இவருடைய முதல் பட நாயகனான நடிகர் ஜிவி பிரகாஷ் இவருக்கு வாய்பளித்துள்ளார். இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக 'அனேகன்' படத்தின் நாயகி அமிரா தஸ்தர் நடித்து வருகிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் சோனியா அகர்வால், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் நாயகனாக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. இதன் பிறகு தற்போது சென்னை மற்றும் காரைக்குடி பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் மற்றொரு நாயகியாக நடிகை சஞ்சிதா செட்டி இணைந்துள்ளார்.