Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

4 ஆஸ்கர் விருதினை வென்ற ஹாலிவுட் படம் ரீமேக் - ஏஆர். முருகதாஸ்

AR Murugadoss with vijay

மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்தினை தொடர்ந்து ஏஆர். முருகதாஸ் விஜய்யின் 62வது படத்தினை இயக்குவதற்கு தயாராகி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி தீபாவளிக்கு படத்தினை வெளியிட இருக்கின்றனர்.

இந்நிலையில் ஏஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்படம் 2004ம் ஆண்டு  ஹாலிவுட்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் வெற்றியை பெற்ற ‘மில்லியன் டாலர் பேபி’ படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்ய போகின்றனர். இந்த ரீமேக் படத்தில் ஹீரோவாக அக்ஷய் குமார் நடிப்பதாகவும், இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் மரினா குவார் நடிக்கவிருப்பதாகவும் தகவலில் வெளிவந்திருந்தது.      

இந்த ஹாலிவுட் படத்தினை கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியதோடு, படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரீமேக் சம்மந்தமான தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

4 ஆஸ்கர் விருதினை வென்ற ஹாலிவுட் படம் ரீமேக் - ஏஆர். முருகதாஸ்