Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பாடகியான அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே

shalini pandey singing song release

தெலுங்கு திரையுலகில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நாயகியாக  நடித்து திரையுலகில் ஷாலினி பாண்டே அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகம் முதல் தமிழ் திரையுலம் வரை ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தினர். இந்த வெற்றி படத்தினை தொடந்து தற்பொழுது ஷாலினி பாண்டே தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் '100 % காதல்', ஜீவா நடிப்பில் உருவாகி வரும் 'கொரில்லா' மற்றும் வரலாற்று சார்ந்த படமான 'மகாநதி' போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் அனைத்து வித படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் இப்படங்களின் வரவேற்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்த நாளுக்கு நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். கடந்த நாட்களில் 100 % காதல், கொரில்லா போன்ற படங்களில் இருந்து வெளிவந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.      

ஷாலினி பாண்டே படங்களில் நாயகியாக நடிப்பதினை தொடர்ந்து தற்பொழுது ஒரு தெலுங்கு படத்தில் பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் தயாராகி வரும் 'நா பிரணமை' என்ற படத்தில் ஒரு முழுப்பாடலையும் ஷாலினி பாண்டே பாடயிருக்கிறார். மேலும் இப்பாடல் நாளை (14.2.18) காதலர் தினத்தினை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஷாலினி பாண்டே இதற்கு முன்னதாகவே சில ஆல்பம் பாடல்களை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக சினிமா துறையில் பாடியிருக்கும் இப்பாடல் காதலர் தினத்தின் அன்று வெளிவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஷாலினி கூறியுள்ளாராம். 

 

பாடகியான அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே