Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பலூன் வெற்றி பெரும் யுவன் ட்வீட்

yuvan shankar raja tweet about balloon movie

ஜெய் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள த்ரில்லர் படம் பலூன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி, ஜனனி அய்யர் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசரில் ஜெய் புது வித கெட்டப்பில் ரசிகர்களை பயத்தில் மிரள வைக்கும் தோற்றத்தில் நடித்துள்ளார்.   

இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார். மேலும் ’70 MM எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சரவணன் ஒளிப்பதிவு, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பு பணியில் இணைந்துள்ளனர். 

இந்நிலையில் படத்தினை வருகிற 29ம் தேதி வெளியிட உள்ளனர். இதன் இடையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பலூன் படத்தினை பற்றி அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். பலூன் படத்தினை பின்னணி இசையுடன் பார்த்தேன். நல்ல முறையில் படம் வந்துள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படம் குடும்பத்தினர் ரசித்து பார்க்கும் வகையில் உள்ளது. இந்த படம் நிச்சியம் வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளார்.       

             

பலூன் வெற்றி பெரும் யுவன் ட்வீட்