Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அதர்வாவின் 'செம போத ஆகாத புது வித ட்ரெண்ட்

sema botha agatha new trend

பான காத்தாடி படத்தினை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் மீண்டும் அதர்வா உடன் 'செம போத ஆகாத' படத்தின் மூலம் இணைந்துள்ளார். கிக்காஸ் எண்டடைன்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் அதர்வா முதல் முதலாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் பெயரில் அதர்வா தயாரித்து நடிக்கும் இப்படத்தில் இதுவரை பார்த்திராத புது வித கெட்டப்பில் நடித்திருப்பதாகவும், அதிரடி ஆக்சன் அதிகளவு நிறைந்து இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.   

இந்நிலையில் படத்தின்  ட்ரைலர் மற்றும் இசை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த ஐடம் காரன், இதயத்தை ஒரு நொடி, செம்ம போத ஆகாத போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்பொழுது இந்த பாடல்கள் வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மிஸ்டி, அனைகா சோதி என இரு நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் அஜய், ஜான் விஜய், கருணாகரன், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு மற்றும் பிரவீன் கேஎல் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளனர்.      

அதர்வாவின் 'செம போத ஆகாத புது வித ட்ரெண்ட்