Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அதர்வாவிற்கு ஜோடியாகும் தனுஷ் நாயகி

adharvaa new movie heroine

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்த படியாக அதர்வாவுடன் இணைந்துள்ளார்.  இந்த படத்தினை ஆர்.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் மற்றும் எம்.கே.ராம்பிரசாத்தின் எம்.கே.ஆர்.பி நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் இசை அமைக்க உள்ளார்.  

இந்நிலையில் படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வந்தது. தற்பொழுது நாயகி தேர்வும் முடிவடைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள 'ஒரு பக்க கதை' படங்களில் நாயகியாக நடித்துள்ள மேகா அகாஷ், கண்ணன் இயக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் அளித்துள்ளார்.  

 இன்னும் பெயரிட படாத கண்ணன் இயக்கவிருக்கும் இந்த புது படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாகவும், தற்பொழுது நாயகி தெலுங்கு படத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைடைவதால் அடுத்த ஆண்டு துவங்க இருக்கும் படப்பிடிப்புகளில் மேகா அகாஷ் கலந்துகொள்ளவுள்ளார்.  

அதர்வாவிற்கு ஜோடியாகும் தனுஷ் நாயகி