Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஒரு பக்க கதை ட்ரைலரை வெளியிடும் - கருப்பன்

vijay sethupathi launch orupakka kathai trailer

மலையாள முன்னணி நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் 'மீன் குளம்பும் மண்பானையும்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல் முதலாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தினை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'ஒரு பக்க கதை' படத்தில் நடித்து வருகிறார். 

கேஎஸ்.ஸ்ரீனிவாசன் தயாரிக்கும் இப்படத்தில் மெகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். மேலும்  பிவி. சந்ரமௌளி, ஜீவா ரவி, லட்சுமி பிரியா மேனன், மீனா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பஸ்ட் லுக். டீசர் முன்பே வெளிவந்த நிலையில் ட்ரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று மாலை 7மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தகவலை வெளியிட்டுள்ளனர்.        

வசன்ஸ் விசுவல் வெண்டுரெஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கோவிந்த் மேனன் இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி வெளியிடுவதினால் அதிகளவு வரவேற்பு படத்திற்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.    

 

ஒரு பக்க கதை ட்ரைலரை வெளியிடும் - கருப்பன்