Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஓவியாவின் ட்விட்டர் சர்ப்ரைஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

oviya twitter account live chat

விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு சில படங்களில் நடித்தும் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஓவியா கடந்த நாட்களில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்டார். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்களின் வாழ்க்கை நிலை முன்னேற்றம் அடையும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் முக்கியமாக நடிகை ஓவியா சொல்லவே வேண்டாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதினையும் கொள்ளையடித்திருந்தார்.      

இதன் மூலம் ஓவியாவிற்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருந்தது. இந்நிலையில் சிலுக்குவார்பட்டி சிங்கம், ஓவியா விட்டா யாரு சீனி, காஞ்சனா 3, போகி மற்றும் தெலுங்கில் இடி நா லவ் ஸ்டோரி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவிற்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது குறிப்பிட தக்கது. இந்நிலையில் ஓவியா ரசிகர்கள் பல நாட்களாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க வருகிற 20ம் தேதி இரவு 8மணிக்கு ட்விட்டரில் லைவ் சேட்டில் ஈடுபடுவதாகவும், அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.  இந்த தகவலை ஓவியா அவரின் ட்விட்டர் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்.    

ஓவியாவின் ட்விட்டர் சர்ப்ரைஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்