சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் சிறந்த தமிழ் படங்கள்
யசோதா (Author) Published Date : Dec 12, 2017 00:17 ISTபொழுதுபோக்கு
சென்னையில் வருகிற 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இண்டோஸினி அப்ரிஸியேஷன் சார்பில் 15வது சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 50 நாடுகளில் இருந்து சுமார் 150 படங்கள் திரையிடப்படுகிறது. அண்ணா, சத்யம், தேவி, தேவிபாலா, கேசினோ, ரஷ்யன், தாகூர் பிலிம் சென்டர், சென்டர் ஆப் செயின்ட் போன்ற 7 திரையரங்குகளில் இந்த 150 படங்கள் திரையிடப்படுகிறது.
2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்துக்கான போட்டியில் விக்ரம் வேதா, 8 தோட்டாக்கள், அறம், மாநகரம், குரங்கு பொம்மை, கடுகு, மகளிர் மட்டும், ஒரு கிடாயின் கருணை மனு, துப்பறிவாளன், ஒரு குப்பை கதை, தரமணி, மனுசங்கடா போன்ற 12 படங்கள் பங்கேற்கிறது. இந்த சர்வதேச திரைப்பட விழா 14-ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடிகர் அரவிந் சாமி கலந்து கொள்கிறார்.
சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் சிறந்த தமிழ் படங்கள்
  Tags :  chennai international film festival, 15th chennai international film festival, best tamil movies, best tamil movie 2017, tamil best movies nominates, chennai, சர்வதேச திரைப்பட விழா, 15வது சர்வதேச திரைப்பட விழா, சிறந்த தமிழ் படத்துக்கான போட்டி, 2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படங்கள், நடிகர் அரவிந் சாமி, 8 நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா