Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தெலுங்கில் வெளிவர உள்ள சீயானின் ஸ்கெட்ச்

chiyaan vikram in sketch movie telugu release from january 26th

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'இரு முகன்' படத்தின் வெற்றியை தொடந்து சீயான் விக்ரம் தற்பொழுது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் படமான  'துருவநட்சத்திரம்' இதற்கு அடுத்த படியாக விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகிய 'ஸ்கெட்ச்' படத்தில் லோக்கல் கெட்டப்பில் களமிறங்கி நடித்து வந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்ததோடு நடிகை தமன்னா இப்படத்தின் மூலம் முதல் முறையாக விக்ரமிற்கு ஜோடியாக இணைந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இவர்களுடன் ஸ்ரீ பிரியங்கா, சூரி, மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உட்பட பலர் நடித்திருந்தனர்.    

‘மூவிங் ஃப்ரேம்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இப்படத்தினை கலைப்புலி.எஸ். தாணுவிற்கு சொந்தமான ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் படத்தினை வெளியிட்டனர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்பொழுது இப்படத்தினை தெலுங்கில் டப் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே தலைப்பில் வருகிற 26ம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் தமன் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்று வருகிறது.

தெலுங்கில் வெளிவர உள்ள சீயானின் ஸ்கெட்ச்