Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்

நடிகர் தனுஷ் காலா படத்தின் டீசரை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'காலா'. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் கபாலி படத்தை தொடர்ந்து இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.

ஆனால் ஜெயேந்திர சரஸ்வதி மறைவின் காரணமாக காலா படத்தின் டீசரை நாளை (02-03-2018) 11 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அனைவரும் காலா டீசருக்காக எதிர்பார்த்திருந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ் காலா டீசரை வெளியிட்டுள்ளார்.

டீசர் வெளியான 10 மணி நேரங்களில் 16,90,000 பார்வையாளர்களை கடந்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்த காலா டீசர் நள்ளிரவில் வெளியானது ரசிகர்களுக்கு சற்று வருத்தமளித்துள்ளது. வெளியான ஒரு மணி நேரங்களில் கபாலி, மெர்சல் போன்ற படங்களின் சாதனைகளை முறியடிக்குமா என்று எதிர்பார்த்த நிலையில் டீசர் நள்ளிரவில் வெளியானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த டீசரில் "இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தை பார்த்ததில்ல..ல?..பாப்பிங்க?.." என்ற வசனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

நள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்