இயக்குனர் கவுதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு
ராசு (Author) Published Date : Dec 12, 2017 16:48 ISTபொழுதுபோக்கு
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து இயக்குனர் கவுதம் மேனன் நடிகர் விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வருகிறார். ஆனால் விக்ரம் 'சாமி 2' படத்தில் பிசியாக இருப்பதால் கவுதம் மேனன் கிடப்பில் போடப்பட்ட 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது அதற்கான படப்பிடிப்பு பணிகளை இன்று தொடங்கியுள்ளார். இந்த படத்தின் மீதமுள்ள காட்சிகளை தற்போது மகாபலிபுரம் சாலையில் உள்ள படப்பிடிப்பு ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தை அடுத்த வருடம் பிப்ரவரியில் வெளியிட இயக்குனர் முடிவு செய்துள்ளார். நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தை ஏப்ரலில் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகிறது. த்ரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிவரும் இந்த படத்திற்கு தரப்புகி சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனனின் நிறுவனமான ஓன்ராகா என்டர்டைன்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் தயாரிக்கிறார். நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் ராணா மற்றும் சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.