ட்விட்டரை தொடங்கிய 'அறம்' இயக்குனர்
விக்னேஷ் (Author) Published Date : Nov 16, 2017 15:46 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரையுலகில் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து பல படங்கள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோபி நைனார் இயக்கத்தில் நவம்பர் 10ம் தேதி வெளிவந்த 'அறம்' படத்திற்கு இன்று வரை நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது. நயன்தாரா இப்படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்து ஏழை மக்களுக்கு குரல் கொடுத்திருப்பது படத்தின் ஐலெட்டாக இருந்தது.
இதன் காரணத்தினால் திரையுலகத்தின் முக்கிய பிரபலங்கள், சமூக வலைதளங்கள், சில அரசியல் துறையினர், காட்சி ஊடகங்கள் என பலராலும் படத்திற்கு பாராட்டுக்கள் பெற்று வருகிறது.மேலும் படத்தினை இயக்கிய கோபி நைனாருக்கும் பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தற்பொழுது இருக்கும் புது வித வாழ்க்கையில் எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் சமூக வலைதளங்களின் மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் 'அறம்' படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இயக்குனர் கோபி நைனார் வலைத்தளத்தை பலரும் பார்த்திருக்கின்றனர். ஏனென்றால் அந்தளவிற்கு டுவிட்டரில் அறம் பற்றிய வெற்றி பதிவுகள் பறந்தது. இதன் காரணத்தினால் கோபி நைனார் தனது ட்விட்டர் பகுதியை தற்பொழுது தொடங்கி இருக்கிறார்.
அறம் - எனக்கு இயக்குனர் எனும் அடையாளம் தந்திருக்கிறது இந்த ஒரு சொல்லால் என் twitter பயணத்தை துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி! என்று முதல் முதலாக ட்விட்டரில் பதிவு செய்து துவங்கியிருக்கிறார்.