Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் சூர்யா படத்தில் ஜோடியாகும் இரு நாயகிகள்

suriya 36 movie heroines

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் புது படத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்தது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த படத்தில் 'பிரேமம்' மலர் டீச்சர் சாய் பல்லவி நடிக்கிறார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். முன்னதாக இந்த படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

அவருக்கு பதிலாக சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்தது. நடிகை சாய் பல்லவி தான் கதாநாயகி என்று முடிவு செய்துள்ள நிலையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் முக்கிய கதாபத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நீராஜா கோனா ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நீராஜா கோனா தனது டிவிட்டரில் "நடிகர் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி அன்று வெளியாகிறது.

நடிகர் சூர்யா படத்தில் ஜோடியாகும் இரு நாயகிகள்