Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யாவின் கேங் படத்துடன் மோதும் நந்தமுறி

gang and jai simha movie release on january

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் காங் என்ற தலைப்பில் வெளிவர உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ல் வெளிவர உள்ளது. இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து இரு திரையுலகிலும் வெகுவான வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்திருந்தது.   

இந்நிலையில் தெலுங்கு முன்னனி சூப்பர் ஸ்டார் நந்தமுறி பாலகிருஷ்ணாவின் 102 வது படமான  'ஜெய் சிம்ஹா' படத்தினை தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களின் ஒருவரான கேஎஸ்.ரவிக்குமார் இயக்கிவருகிறார். இந்த படத்தில் நாயகியாக லேடி சூப்பர் நயன்தாரா இணைந்துள்ளார். அதிரடி ஆக்சன் நிறைந்து உருவாகியுள்ள இந்த படத்தினை சி.கே.என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சி.கல்யாண் தயாரித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இப்படத்தினை புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு ஜனவரி 12ல் வெளிவர உள்ளது.     

இந்நிலையில் தெலுங்கில் டப் செய்து வெளிவர உள்ள சூர்யாவின் காங் படத்திற்கு வரவேற்புகள் கிடைப்பதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்துடன் சூர்யாவின் காங் படம் போட்டியிட இறங்கியுள்ளது.  

சூர்யாவின் கேங் படத்துடன் மோதும் நந்தமுறி