Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நயன்தாராவின் தெலுங்கு பட ட்ரைலர் ட்ரெண்ட்

jai simha movie trailer

அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'வேலைக்காரன்' படத்தில் நடித்த நயன்தாரா இந்த படத்திலும் மாபெரும் வெற்றியும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில் தெலுங்கு முன்னனி சூப்பர் ஸ்டார் நந்தமுறி பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக 'ஜெய் சிம்ஹா' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நந்தமுறி  பாலகிருஷ்ணாவின் 102வது படம் என்பது குறிப்பிட தக்கது. மேலும் இந்த 102 வது படத்தினை தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களின் ஒருவரான கேஎஸ்.ரவிக்குமார் இயக்கிவருகிறார்.     

அதிரடி ஆக்சன் நிறைந்து உருவாகியுள்ள இந்த படத்தினை சி.கே.என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சி.கல்யாண் தயாரித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில்  ட்ரைலரில் நந்தமுறி பாலகிருஷ்ணாவின் வசனம், சண்டை காட்சி என அனைத்தும் ரசிகர்கள் கவரும் வகையில் இருந்ததால் ரசிகர்கள் தற்பொழுது வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.

இந்த படத்தில் சிறந்தன் பட் இசையமைத்துள்ளார். மேலும் படத்தொகுப்பு பணியை பிரவீன் ஆண்டனி ஈடுபட, ஒளிப்பதிவில் சி.ராம் பிரசாத் மேற்கொண்டுள்ளார். அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடாஷா டோஷி, ஹரிப்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் இணைத்து பிரகாஷ் ராஜ், அஷுடோஷ் ராணா, ப்ரஹ்மானந்தம், முரளி மோகன், ஜெயா பிரகாஷ் ரெட்டி, பிரபாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.            

நயன்தாராவின் தெலுங்கு பட ட்ரைலர் ட்ரெண்ட்