Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

திரையுலகில் 14 ஆண்டுகளை கடந்த நயன்தாரா

nayanthara career history

ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நயன்தாரா பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்பொழுது முன்னனி நாயகியாகவும் வலம்வருகிறார். இந்நிலையில் அறம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை கையாண்டு தமிழ் திரையுலகில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தி உள்ளார்.  

இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் நேற்று ( 22.12.17) வெளிவந்த வேலைக்காரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் வெகுவான பாராட்டுகளை பெற்று வருகிறார். அறம் படத்திற்கு கிடைத்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மத்தியில் வேலைக்காரன் படத்தின் வரவேற்புகளும் அதிகரித்துள்ளது.   

இந்த படத்திற்கு அடுத்தபடியாக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நந்தமுறி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாக்கி வரும் அவரது 102வது படமான ஜெய் சிம்ஹா படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தினை கேஎஸ். ரவிக்குமார் இயக்கிவருகிறார். மேலும் இப்படத்தின் பாடல் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வலைத்தளத்தில் ட்ரெண்டானது.     

இந்நிலையில் வருகிற 25ம் தேதி முதல் நயன்தாரா சினிமா பயணத்தை தொடங்கி 14 வருடம் நிறைவடைய உள்ளது. இந்த தகவலை கொண்டாடும் விதமாக ரசிகர்கள்  #14YearsofNayanthara என்ற ஹேஷ் டேக்கை கிரியேட் செய்து வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.           

திரையுலகில் 14 ஆண்டுகளை கடந்த நயன்தாரா