Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சுந்தர் சியின் 'கலகலப்பு 2' டீசர்

kalakalappu 2 teaser

சுந்தர்.சி இயக்கத்தில் அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சித்தர்.சி தயாரித்து வரும் 'கலகலப்பு 2' படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, மிர்ச்சி சிவா, மனோபாலா, சதீஸ், யோகி பாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, வையாபுரி, ராதாரவி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி காரைக்குடியில் தொடர்ந்தது. அதன் பின்னர் காசி, இந்தூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றது.      

 படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் டிசம்பர் இரண்டாம் வாரத்திற்குள் நிறைவடைந்து விட்டதினை தெரிவிக்கும் விதமாக சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஷி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவில் படக்குழு தெரிவித்தது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். 

சுந்தர் சியின் 'கலகலப்பு 2' டீசர்