Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இந்தியாவின் முன்னணி இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்

Dulquer Still

மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் 'ஓகே கண்மணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலே தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பினை பெற்றதினை தொடர்ந்து தமிழில் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.   

இந்நிலையில் இந்திய சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யூப் இயக்கவிருக்கும் 'மன்மரசியன்' பாலிவுட் படத்தில் துல்கர் சல்மான் நடிக்க போகிறார். கர்வான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் துல்கர், இப்படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹிந்தியில் 'மன்மரசியன்' படத்தில் நடிப்பிற்கு ஒப்பந்தமாகியுள்ளார். 

இவருக்கு ஜோடியாக ஆடுகளம் டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் சேர்ந்து விக்கி காஷால் முன்னணி கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டனர்.

மேலும் படத்தில் இணையவிருக்கும் டெக்னிஷியன், நிபுணர்கள், மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதத்தில் துவங்கவிருப்பதாக படக்குழு கூறியுள்ளனர்.     

 

இந்தியாவின் முன்னணி இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்