Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

kannum kannum kollaiyadithaal movie first look poster

புதுமுக இயக்குனரான தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க 'பெல்லி சுப்புழு' படத்தின் மூலம் பிரபலமான ரிது வர்மா அவருக்கு ஜோடியாக இணைந்துள்ளார். தற்போது இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் 'வாயை மூடி பேசவும்', 'ஓகே கண்மணி' படத்திற்கு பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தமிழ் படமாகும். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. முழுக்க சாலை ஓரங்களில் உருவாக்கப்படும் இந்த படத்திற்கு கேஎம் பாஸ்கரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். காதல் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் துல்கர் சல்மான் ஐடி ஊழியர் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். துல்கர் சல்மானின் 25வது படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான 'நடிகையர் திலகம்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெமினி கணேசன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் சாவித்ரி காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜெமினி கணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக படக்குழு முன்னதாக தெரிவித்தது. இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலரை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்