Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக தாமதமாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. நீண்ட வருடங்களாக தயாரிப்பாளர் பிரச்னையாலும், பண பிரச்சனையாலும் தாமதமாகி கொண்டு வந்த இந்த படங்களின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்த படம் மேகா ஆகாசுக்கு முதல் படம். ஆனால் இந்த படம் வெளியாவதற்குள் மூன்று படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த திங்கட் கிழமை துவங்கியதாகவும், இந்த படத்தின் புதிய டைட்டில் லோகோவை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) வெளியிட உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார், தனுசுக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் தனுஷ், சசிகுமார், கவுதம் மேனன் என மூன்று இயக்குனர்களும் ஒரே படத்தில் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளதாக சமீபத்தில் கவுதம் மேனன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு