Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரசிகனை ரசிக்கும் தலைவன் ஜூங்கா நாளை முதல்

மீண்டும் இயக்குனர் கோகுல் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ஜூங்கா படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் நாளையை விடியலை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திற்கு பிறகு நாளை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் நாளை வெளியாகவுள்ள படம் 'ஜூங்கா'. விஜய் சேதுபதி படம் என்றாலே என்டர்டெய்ன்மென்டுக்கு பஞ்சமே இருக்காது. அதற்கேற்றவாறு இந்த படத்தை 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கியுள்ளார்.

இவருடைய இயக்கத்தில் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற மூன்று படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இவருடைய நான்காவது படமாக 'ஜூங்கா' நாளை வெளியாகவுள்ளது. இந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இந்த படம் அதற்கும் மேல பக்கா என்டர்டெய்ன்மெண்ட் படமாக இருக்கும் என்று இயக்குனர் கோகுல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் காமெடியை பலப்படுத்தும் விதமாக வளர்ந்து காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். இந்த படத்தில் கஞ்ச டானுடன் இணைந்து அசிஸ்டன்ட் டானாக படம் முழுக்க பயணம் செய்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சயிஷா மற்றும் மடோனா சபாஸ்டின் போன்ற இரு நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து டானுடைய அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். ஒரு டான் குடும்பத்தில் இருந்து வந்த விஜய் சேதுபதி, எப்படி டானாக மாறுகிறார், வெளிநாட்டில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்கிறார் என்பது படத்தின் கலகலப்பான கதை.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது மலேசியாவில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாளை வெளியாகவுள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள், எப்படா விடியும்னு காத்திருக்கின்றனர். கண்டிப்பா நாளைக்கு ரசிகர்களுக்கு செம என்டர்டெய்ன்மென்ட் இருக்கு..

ரசிகனை ரசிக்கும் தலைவன் ஜூங்கா நாளை முதல்