Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சிரஞ்சிவியின் சரித்திர படம்

sye raa movie shooting

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி பல வெற்றி படங்களை கொடுத்தினை தொடர்ந்து அவரது 150வது படத்தினை இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கு திரையுலகில் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும்     இந்த படம் முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த 'கத்தி' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிட்ட தக்கது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து ‘மெகா ஸ்டார்' சரித்திர படமான ‘சைரா நரசிம்ஹா ரெட்டி' எந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கிவருகிறார். மேலும் இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து தமிழ் திரையுலகின் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா போன்ற பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தினை ‘மெகா ஸ்டார்' மகன் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் ‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார்.  

இந்நிலையில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலே அவரது டிவிட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார்.  

முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சிரஞ்சிவியின் சரித்திர படம்