Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

திருநங்கைகள் கடவுளின் உருவம் - விஜய்சேதுபதி

vijay sethupathi

வளர்ந்து வரும் நாயகனாகவும் முன்னணி நடிகராகவும் தமிழ் திரையுலகில் வளம் வரும் விஜய் சேதுபதி, படங்களில் மட்டும் நடிக்காமல் விளம்பரங்களில் நடிப்பது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று பிஸியான வலம்வருகிறார். இந்நிலையில் 2017ம் ஆண்டிற்கான திருநங்கை தினத்தின் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார்.       

2017ம் ஆண்டிற்கான திருநங்கைகளின் விழா சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை  மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் சேதுபதி திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் திருநங்கைகள் கடவுளின் பிழை அல்ல, கடவுளின் உருவம் என்றும்,  திருநங்கைகள் தனது சுதந்திரத்தை தானே பெரும் காலம் நெருங்கியுள்ளததாக குறிப்பிட்டார்.         

 

திருநங்கைகள் கடவுளின் உருவம் - விஜய்சேதுபதி