Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இசைப்புயலின் இசையில் தனது படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய ஜிவி பிரகாஷ்

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார், இசைப்புயலின் இசையில் 'பீட்டர் பீட்ட ஏத்து' என்று தொடங்கும் ஓப்பனிங் பாடலை பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'செம'. இந்த படங்களுக்கு பிறகு அடுத்ததாக குப்பத்து ராஜா, 4ஜி, ஐயங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மையம் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இதில் மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் 'சரவம் தாள மையம்' படம் உருவாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராகவே நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 'பீட்டர் பீட்ட ஏத்து' என்ற பாடலை ஜிவி பிரகாஷ் தனது குரலில் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். இது குறித்து ஜிவி பிரகாஷ் கூறுகையில் "இசைப்புயலின் இசையில் எனது படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

'பீட்டர் பீட்ட ஏத்து' என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளேன். மெர்சல் அரசன் பாடலுக்கு பிறகு இந்த பாடலும் மிகவும் தர லோக்கலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார். மைண்ட்ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா, நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்செயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இசைப்புயலின் இசையில் தனது படத்தின் ஓப்பனிங் பாடலை பாடிய ஜிவி பிரகாஷ்